மன்னார் பெரியமடு கிராமத்தில் இடி,மின்னல் கடும் மழை-4 வீடுகள் சேதம்-17குடும்பங்கள் பாதிப்பு.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை 30-04-2020 மாலை இடி,மின்னல் மற்றும் பலற்ற காற்றுடன் கூடிய கடும் மழையினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, தோட்ட செய்கையும் பாதீப்படைந்துள்ளது.
நோற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் பெரிய மடு கிராமத்தில் இடி,மின்னல் தாக்கத்துடன் கூடிய மழையினால் வீடு ஒன்று பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு,அக்கிராமத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி தாக்கத்தினால் மூன்று வீடுகள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பப்பாசி செய்கை முழுமையாக பாதீப்படைந்துள்ளதோடு, பலாமரம்,வாழைமரம் போன்றன சேதமடைந்துள்ளது.
இதனால் சுமார் 17 குடும்பங்கள் வரை பாதீப்படைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை 1-05-2020 சென்ற அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் பெரிய மடு கிராமத்தில் இடி,மின்னல் தாக்கத்துடன் கூடிய மழையினால் வீடு ஒன்று பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு,அக்கிராமத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி தாக்கத்தினால் மூன்று வீடுகள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பப்பாசி செய்கை முழுமையாக பாதீப்படைந்துள்ளதோடு, பலாமரம்,வாழைமரம் போன்றன சேதமடைந்துள்ளது.
இதனால் சுமார் 17 குடும்பங்கள் வரை பாதீப்படைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை 1-05-2020 சென்ற அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பெரியமடு கிராமத்தில் இடி,மின்னல் கடும் மழை-4 வீடுகள் சேதம்-17குடும்பங்கள் பாதிப்பு.
Reviewed by Author
on
May 01, 2020
Rating:
Reviewed by Author
on
May 01, 2020
Rating:

No comments:
Post a Comment