கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்க இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும்-பில்கேட்ஸ்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமா 210-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தலாம் என்று சில ஆண்டுகள் முன்பு உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார்.
தற்போது அவர் சொல்வது போலவே கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகில் மக்களின் உயிரை எடுத்து வருவதால், இது குறித்து பில்கேட்ஸ் கூறும் ஒவ்வொரு தகவல்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவர் சமீபத்தில், கொரோனாவுக்கு பரிந்துரை செய்யப்படும் தடுப்பு மருந்துகள் சிறந்த பலன் கொடுப்பவையாக இல்லை.

பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் உயிர்களை காப்பாற்றுமே தவிர, நம் அனைவரையும் அது பழைய பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருமா என்பது தான் கேள்வி குறி தான், இதனால் கொரோனாவுக்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை உலகில் உள்ள அனைவரும் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பு இல்லாதவர்களாக தான் இருப்போம்.
உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான , அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கொரோனாவுக்கான சிறந்த, பாதுகாப்பான மருந்தினை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.
அந்த மருந்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் அனைத்து பாகங்களுக்கும் விரைவில் சென்றடைய வேண்டும்.
இது மாதிரியான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்து இன்னும் 9 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளில் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்க இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும்-பில்கேட்ஸ்
Reviewed by Author
on
May 02, 2020
Rating:
No comments:
Post a Comment