ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு்ள்ளது.....
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர்.ஆறுமுக தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு பத்ரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் , முன்னால் பராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் , மதத்தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை பாராளுமன்ற கட்டடதொகுதியிலும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்..
மறுநான் கொத்மலை , வேவண்டனிலுள்ள தொண்டமான் (பங்களாவில்) மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அதன்பின் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்..
மே 31 ஆம் திததி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் இடம்பெறும்.
ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு்ள்ளது.....
Reviewed by Author
on
May 27, 2020
Rating:
Reviewed by Author
on
May 27, 2020
Rating:





No comments:
Post a Comment