மூன்று முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணினேன் - முகமது ஷமி
இந்நிலையில் வீட்டிலே முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை பற்றி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரோகித் சர்மாவுடன் உரையாடிய போது “ நான் மூன்று முறை தற்கொலை செய்ய எண்ணினேன்” என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இவர் கூறுவதாவது,
“கடந்த 2015 உலகக் கோப்பையில் நான் காயமடைந்தபோது நான் முழுமையாக குணமடைவதற்கு 18 மாதங்கள் ஆகியது . இது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலமாக அமைந்தது.
நான் மீண்டும் விளையாடத் தொடங்கியபோது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தால் அப்போது மூன்று முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என யோசித்தேன்.
மார்ச் 2018ல் குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதனால் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது.
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும் வரை பிசிசிஐ, ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினேன்.
அந்தச் சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். என்னுடன் அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன்.
என்னுடன் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஷமி .
மூன்று முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணினேன் - முகமது ஷமி
Reviewed by Author
on
May 05, 2020
Rating:

No comments:
Post a Comment