வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் ஒருவர் கைது...
வடமராட்சி கிழக்கு வல்லிபுரப் பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (28) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் ஒருவர் கைது...
Reviewed by Author
on
May 29, 2020
Rating:

No comments:
Post a Comment