பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள் 1 நிமிடத்திற்குள் வெளியே வந்துவிடும்
காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது?
நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் நம் காதிற்குள் பூச்சிகள் புகுந்து விட்டால் என்ன செய்வது?
காதினுள் சென்ற பூச்சியை முதலில் சாகடிக்க வேண்டும், எவ்வாறு அவற்றை சாகடிப்பது?
காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது எண்ணெய் வகையோ அல்லது உப்பை கரைத்து அவற்றை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு காதில் ஊற்றுவதினாள் என்ன நிகழும் என்றால் பூச்சியால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளேயே இறந்து மேலே வந்துவிடும்.
இன்னும் பலர் தண்ணீரை ஊற்றுவார்கள் இவை மிகவும் தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது, இன்னும் சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அதன் தலை நம் காதில் உள்ள பகுதியை கடித்தவாறு கதிற்குள் தலை மாட்டிக் கொள்ளும். ஆகவே பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.
பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள் 1 நிமிடத்திற்குள் வெளியே வந்துவிடும்
Reviewed by Author
on
May 04, 2020
Rating:
Reviewed by Author
on
May 04, 2020
Rating:


No comments:
Post a Comment