கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்க தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில், 2020 இறுதிக்குள் அமெரிக்காவில் தடுப்பூசி இருக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலைியல் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜேர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், சில மாதங்களில் கொரோனா தடுப்பூசியை உருவாக்க முடிந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று கூறினார்.
ஆனால், அதை உருவாக்க சில வருடங்கள் ஆகலாம், ஏனெனில் நிச்சயமாக பின்னடைவுகள் ஏற்படக்கூடும், ஏனென்றால் சில தடுப்பூசிகளில் நாங்கள் அவ்வாறான பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகளின் வளர்ச்சி மருத்துவத்தில் மிகவும் சவாலான மற்றும் கடினமான பணிகளில் ஒன்றாகும் என ஜென்ஸ் ஸ்பான் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்க அமெரிக்கா-ஜேர்மனி இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி
Reviewed by Author
on
May 04, 2020
Rating:

No comments:
Post a Comment