மிக்க மகிழ்ச்சி... கிம் ஜொங் உன் மறுபிரவேசத்திற்கு -டிரம்ப் பதிவு -
வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கடந்த 15ஆம் திகதி முதல் பொதுவெளியில் காணப்படவில்லை. இதனால், உலக நாடுகள் அவரது உயிர் ஊசலாடுவதாக பல செய்திகள் பரப்பின.
இந்நிலையில்,தென்கொரியா அவர் நலமுடனே இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது போன்ற எந்த அறிகுறியும் அந்நாட்டில் காணப்படவில்லை. இது மொத்தம் வதந்திதான் என்று தெரிவித்தது.
ஆனால், தொடர்ந்து அவரது பதவியை சகோதரி ஏற்றுகொள்ள இருக்கிறார் என்பதுபோன்ற செய்திகள் வெளியாகின.
இதனிடையே கிம் ஜொங் உன் நேற்று பொது வெளியில் தோன்றிய புகைப்படம் வெளியானது. அதில்,அவர் நல்லபடியாக நடந்து வருவதுபோன்றும், மகிழ்ச்சியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களில் காணப்பட்டது.
இதனை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர்பக்கத்தில் புகைப்படங்களை ரிடிவிட்டு செய்து “அவர் திரும்ப வந்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது நன்றாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
I, for one, am glad to see he is back, and well! https://t.co/mIWVeRMnOJ— Donald J. Trump (@realDonaldTrump) May 2, 2020
மிக்க மகிழ்ச்சி... கிம் ஜொங் உன் மறுபிரவேசத்திற்கு -டிரம்ப் பதிவு -
Reviewed by Author
on
May 03, 2020
Rating:

No comments:
Post a Comment