முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருவர் உயிரிழப்பு -
கொழும்பு குணசிங்கபுர பிரதேசத்தில் இருந்து முல்லைத்தீவு பகுதிக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் 80 வயதை கடந்தவர்கள் என்றும் முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இரண்டு வயோதிபர்கள் உயிரிழந்த விடயம் பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் யாசகம் பெற்று வந்த மற்றும் வீடுகள் அற்ற நிலையில் நிர்க்கதியாகியிருந்த 100இற்கும் மேற்பட்டவர்கள் கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் சுமார் 80 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று காலை சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்களின் இரத்த மாதிரிகளை பெற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருவர் உயிரிழப்பு -
Reviewed by Author
on
May 03, 2020
Rating:
Reviewed by Author
on
May 03, 2020
Rating:


No comments:
Post a Comment