ரஷ்யா பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அவரே வெளியிட்ட தகவல் -
கொரோனா வைரஸ் காரணமாக ரஷ்யாவில், தற்போது வரை 106,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,073 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக இருந்த ரஷ்யாவில், தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் நாட்டின் பிரதமர் Mikhail Mishustin-யும் விடவில்லை.
இது குறித்து அவர் புடினுடனான வீடியோ சந்திப்பின் போது, நான் எடுத்த கொரோனா வைரஸ் பரிசோதனை நேர்மறையாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கான பரிசோதனை முடிவு நேர்மறையாக வந்துள்ளதால், அவர் சுய தனிமைப்படுத்தி கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அவரே வெளியிட்ட தகவல் -
Reviewed by Author
on
May 01, 2020
Rating:

No comments:
Post a Comment