துபாயிலிருந்து 290 இலங்கையர்களுடன் நாடு திரும்பிய விமானம்..
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்ற
நிலையில், உலகம் பூராகவும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக,
இலங்கைக்கு வர முடியாமல், அந்நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 290
பேரை ஏற்றிய விசேட விமானம், துபாயிலிருந்து இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க
சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவர்களில் 120 கர்ப்பிணி தாய்மார்களும் அடங்குவதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள், சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களினால் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச
விமான நிலையத்தை அண்டியுள்ள 04 ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்க
வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து 290 இலங்கையர்களுடன் நாடு திரும்பிய விமானம்..
Reviewed by Author
on
June 18, 2020
Rating:

No comments:
Post a Comment