60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...
சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர்...
தலைமன்னார் மற்றும் பேசாலை பகுதியை சேர்ந்த 39, 30 வயதான இருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
புங்குடுதீவு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 57 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இது சுமார் 60 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது...
60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் புங்குடுதீவில் கைது...
Reviewed by Author
on
June 24, 2020
Rating:

No comments:
Post a Comment