கைத்தொழில் கல்லூரிகள், ஜெர்மனி மற்றும் தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களை திறக்கும் திகதி தீர்மானம்......
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் 39 கைத்தொழில் கல்லூரிகள் காணப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் 110,000 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி கற்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது...
இதேவேளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் திரையரங்குகளை மீள திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.
திரையரங்கு உரிமையாளர்களுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்பத்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு துரிதமாக அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
June 17, 2020
Rating:


No comments:
Post a Comment