யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னால் அரசாங்கம் தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை ஒதுக்கி தன்னிச்சையாக பேரினவாதமாக செயல்பட்டது.......
தற்போதைய அரசாங்கம் எங்களுடைய மக்களின் உரிமைகளை மறுத்து
இன்று அவர்களுடைய அமைச்சர்கள் தமிழர்களுடைய வாக்குகள்
தேவையில்லை,முஸ்ஸீம்களுடைய வாக்குகள் தேவையில்லை என்று சிறுபான்மை இன
மக்களுக்கு எதிராக உயர்ந்த ஒரு இன வெறித்தனமான நடவடிக்கைகளை
மேற்கொண்டிருக்கின்றார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட தலைமை
வேட்பாளர் ஜே.பிரிம்லஸ் கொஸ்தா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய
தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,வேட்பாளருமான ஏ.சமியு மஹம்மது பஸ்மி
தலைமயில் மன்னாரில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் இன்றைய
தினம் திங்கட்கிழமை மதியம் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன்
போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின்
வன்னி மாவட்ட தலைமை வேட்பாளர் ஜே.பிரிம்லஸ் கொஸ்தா அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஐக்கிய
தேசியக்கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் வட-கிழக்கு மக்களுக்கும்
, தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை வழங்கி அவர்களுடைய
தேவைகளை கடந்த காலங்களில் நிறைவேற்றி வந்துள்ளனர் என்பதை நினைவூட்ட
கடமைப்பட்டுள்ளோம்.
தற்போதைய
அரசாங்கம் எங்களுடைய மக்களின் உரிமைகளை மறுத்து இன்று அவர்களுடைய
அமைச்சர்கள் தமிழர்களுடைய வாக்குகள் தேவையில்லை, முஸ்ஸீம்களுடைய வாக்குகள்
தேவையில்லை என்று சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக உயர்ந்த ஒரு இன
வெறித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள்
இந்த தேர்தல் கலத்திலே எங்களுடைய ஐக்கிய தேசியக்கட்சியின் அணி ஒரு
ஒழுக்கமான தேர்தல் முறையை கடைப்பிடித்து போட்டியிடும் அணைத்து கட்சியின்
வேட்பாளர்களையும் கௌரவமான முறையில் மதிப்பது,அவர்களுக்கு எதிரான அரசியல்
சூழ்ச்சிகளுக்கு எதிரான விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுதல்,பண்பான
முறையில் தேர்தல் கடமைகளை முன்னெடுப்பது தெடர்பாக எமது வேட்பாளர்களுக்கு
நாம் கட்டளையிட்டுள்ளோம்.
ரணில்
விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு-கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திகளுக்காக
அதிகலவான வேளைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.கிராம எழுச்சி
வேளைத்திட்டத்தினூடாக வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலையங்கள்
புனரமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பல்வேறு வேளைத்திட்டங்கள் வடக்கு
கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான
நிலையத்தை அமைத்தார்.
இன்னும்
ஐந்து வருட காலம் எங்களுக்கு கிடைத்து இருந்தால் வடக்கு கிழக்கு இளைஞர்கள்
தொழில் வாய்ப்புக்களை பெற்று ஒரு அபிவிருத்தி அடைந்த ஒரு பிரதேசமாக வடக்கு
கிழக்கு மாறி இருக்கும்.
யுத்தம்
முடிவடைந்த பின்னர் முன்னால் அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம்
தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை ஒதுக்கி தன்னிச்சையாக பேரினவாதமாக
செயல்பட்டது.
ரணில்
விக்கிரமசிங்க அவர்களின் நல்லாட்சி அரசாங்கம் புதிய ஒரு அரசியல் அமைப்பை
தமிழ், முஸ்ஸீம் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி அந்த அரசியல் யாப்பை
ஏற்பாடு செய்த நேரத்தில் எதிர் பாராத விதமாக அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக
எங்களுடைய அரசாங்கம் வீழ்ச்சி அடைந்தது.
-மீண்டும் எங்களுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய தலைமையில் நாட்டில் ஓர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.
அந்த ஆட்சிதான் தமிழ் முஸ்ஸீம் சிறு பான்மை இன மக்களுக்கு மகிழ்ச்சியான அமைதியான அபிவிருத்தியான ஒரு அரசாங்கமாக அமையும்.
அதற்காக
நாங்கள் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றோம். யானை
சின்னத்தின் மூலமாக போட்டியிடும் எங்கள் அனைவருக்கும் உங்களின் பூரணமான
ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...
யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னால் அரசாங்கம் தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை ஒதுக்கி தன்னிச்சையாக பேரினவாதமாக செயல்பட்டது.......
Reviewed by Author
on
June 15, 2020
Rating:
No comments:
Post a Comment