விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் சுபைரினால் தீர்வு.............
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்
இடம்பெயர்ந்து சமாதான சூழ்நிலையின் பின்னர் மீண்டும் மீள்குடியேறி ஏறாவூர்
பற்று மாவடிஓடை கணங்குளமடுவில்
கடந்த 10 வருடத்திற்கு மேலாக ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள் மேட்டுப் நிலப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த
போதிலும் இவர்கள் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான உரம்
வசதிகள் மாத்திரமே மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு
வருகிறது.
மாறாக
பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் பம்பிகள், பயிர்களை அறுவடை செய்யும்
இயந்திரங்கள், நீர் இறைப்பதற்குத் தேவையான கிணறு வசதிகள், நடைபாதை வசதிகள்
போன்றவை எதுவுமே மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படாமல் மிக நீண்ட
காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
குறித்த விவசாயிகள் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்
எம்.எஸ் சுபைர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இன்று
காலை
ஏறாவூர்பற்று மாவடிஓடை கணங்களமடுவிற்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர்
அவர்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைக் நேரடியாக பார்வையிட்டு தேவைகளைக்
கேட்டறிந்து கொண்டதுடன்,
மாவட்ட
விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளான பிரதி விவசாயப் பணிப்பாளர்
திரு.பேரின்பராஜா, உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.சித்திரவேல் ஆகியவர்களை
சம்பவ இடத்திற்கு அழைத்து குறித்த விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளை
சுட்டிக்காட்டினார்.
அத்துடன் முன்னாள் அமைச்சரினால் கணங்குளமடு மேட்டுநிலப் பயிர்செய்கை விவசாய சங்கம்
ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
குறித்த
சங்கத்தினை பதிவு செய்த பின்னர் இனி வரும் காலங்களில் ஏறாவூர் பற்று
மாவடிஓடை கணங்குளமடு முஸ்லிம் விவசாயிகளுக்குத் தேவையான மாணியங்கள் மற்றும்
அனைத்து வசதிகளையும் இச் சங்கத்தின் மூலம் வழங்குவோம் என அதிகாரிகள்
உறுதியளித்தனர்.
விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் சுபைரினால் தீர்வு.............
Reviewed by Author
on
June 12, 2020
Rating:
Reviewed by Author
on
June 12, 2020
Rating:




No comments:
Post a Comment