ஊவாமாகாணத்தில் மனிதநேய பணிகளில் “லக்ஸ்மி கரங்கள்”
ஊவாமாகாணத்தின் பதுளை மாவட்டத்திலுள்ள வேவலின்ன கிராமத்தில் மனிதநேய பணிகளில் இன்று “லக்ஸ்மி கரங்கள்”
வடமாகணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆற்றிவந்த லக்ஸ்மி தாய் தன் கரங்களை புலம்பெயர்ந்துள்ள தாயக உறவுகள் பற்றிக்கொண்டதன் நிமிர்த்தம் வடமாகாணம், கிழக்குமாகாணம், மத்தியமாகாணம், அத்துடன் இந்தியாவிலுள்ள எமது தாயக உறவுகளை அரவணைத்து இன்று (11-06-2020 வியாழக்கிழமை) ஊவாமாகணத்தின் பதுளை நகரிலுள்ள வேவலின்ன மற்றும் ஸ்பிரிங்வேலி மேல்மலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மிகவும் நலிவடைந்த 100 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களின் கஸ்டத்தின் ஒர் சிறு ஊன்றுதலை இன்று லக்ஸ்மி கரங்கள் செய்துள்ளது.
GO-FUND-ME மூலமாக சேகரித்து வழங்கிய நிதி பயன்படுத்தப்பட்டது தொடர்ச்சியாக புலம்பெயர்ந்துள்ள எமது தாயக உறவுகள் வழங்கும் பங்களிப்பானது உரியவர்களுக்கு சென்றடைகின்றது அந்த வகையில் லக்ஸ்மி கரங்களை பற்றிக்கொண்ட அத்தனை தாயக உறவுகளுக்கும் குறிப்பாக ஜது தம்பிக்கும் ஊவாமாகணத்தில் இவ்வுதவியினை பெற்றுக்கொண்ட 100 குடும்பங்கள் சார்பான நிறைவான நன்றிகளை தெரிவிப்பதுடன் இதனை நெறிப்படுத்தி ஒழுங்கமைத்த மதிப்பிற்குரிய சிரேஸ்டவிரிவுரையாளரும் சமூக மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் திரு. இரா.புஸ்பகாந்தன் சேர் அவர்களுக்கும் ஆசிரியர் திரு.எஸ். பவநிதரன் மற்றும் பிரிவின் கிராம உத்தியோகத்தர் , தோட்டத்தின் சமூக உத்தியோகத்தர்களுக்கு லக்ஸ்மி கரங்கள் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் லக்ஸ்மி கரங்கள் சார்பாக நேரடியாக திரு. குலநாயகம் மற்றும் திரு. சிறி ( GS ) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள் .
ஊவாமாகாணத்தில் மனிதநேய பணிகளில் “லக்ஸ்மி கரங்கள்”
Reviewed by Author
on
June 11, 2020
Rating:

No comments:
Post a Comment