நாட்டின் சில மாவட்டங்களில் இன்று மாதிரி தேர்தல்.............
மாத்தளை மாவட்ட மாதிரி தேர்தல் வாக்களிப்பு இறத்தோட்டை லோங்வில் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
தேர்தல் திணைக்கள ஆணையாளர் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் இந்த ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
முகக்கவசங்களை அணிந்தவாறு வந்திருந்த வாக்காளர்கள் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒத்திகை வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம், அம்பாறை, பதுளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாதிரி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
கம்பஹா, புத்தளம், மாத்தளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு நேற்றைய தினம் (13) மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது.
நாளைய தினம் (15) முல்லைத்தீவு மாவட்டத்திலும் எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இருவேறு இடங்களிலிலும் மாதிரி தேர்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடு முழுவதும் மேலும் 15 வாக்களிப்பு ஒத்திகைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 15 மாதிரித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதுடன், நாளையும் எதிர்வரும் 20 ஆம் திகதியும் அவை நடைபெறவுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பேணுவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில இதன்போது கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment