இராணுவ சோதனை சாவடியில் வாகனம் மோதி விபத்து..
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்தின்
முன்னால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது மன்னார் நகரசபைக்கு
சொந்தமான கழிவு பவுஸர் மோதி விபத்து
மன்னார்
நகரசபைக்கு சொந்தமான கழிவு பவுஸரானது கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை
பகுதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமான மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு
செல்லும் வளியில் பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான சோதனை சாவடியில்
கட்டுப்பாட்டை மீறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த
வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த விபத்தின் போது சோதனை சாவடிக்கு என வீதியில் அமைக்கப்பட்ட தடைகள்
தூக்கி வீசப்பட்டதுடன் சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி
முழுவதும் சேதம் அடைந்துள்ளது விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
இராணுவ சோதனை சாவடியில் வாகனம் மோதி விபத்து..
Reviewed by Author
on
June 25, 2020
Rating:
Reviewed by Author
on
June 25, 2020
Rating:









No comments:
Post a Comment