'சைவத் தமிழர்களுக்கு' என மன்னாரில் இருந்து குரல் ஒன்று ஓங்கி ஒலிக்க வேண்டும்-மனோ ஐங்கரசர்மா
வன்னியில்
சுயேட்சைக்குழு 1 இல் போட்டியிடுகின்ற 'தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி'யின்
ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்
பெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே முதன்மை வேட்பாளர் மனோ ஐங்கரசர்மா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
'தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி' இந்த முறை வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு 01 இல் போட்டியிடுகின்றோம்.
மன்னார்,வவுனியா
,முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த வன்னி தேர்தல்
தொகுதியில் சைவத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும்,தமிழ் மக்களின்
உரிமைகளுக்காகவும் ஏற்கனவே இருக்கின்ற கட்சிகளினால் மக்களுக்கு போதிய
உரிமைகளை பெற்றுக் கொடுக்காத காரணத்தினாலும் மக்களின் அடிப்படை உரிமைகளை
வென்றெடுப்பதற்காக எங்களது மக்களின் விருப்பத்தின் பேரில் இந்த கட்சியானது
உதயமாகி இந்த முறை தேர்தலை சந்திக்கின்றது.
எனவே
எங்களது கட்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்கி எங்களை பாராளுமன்றம்
அனுப்பினால் நிச்சயமாக நாங்கள் எங்கள் மக்களுக்காக செய்ய வேண்டியவற்றை
நாங்கள் செய்வோம்.
செய்ய
இயலாத விடயங்களை நாங்கள் செய்யப்போவதில்லை. அடிப்படை உரிமைகளில் இருந்து
எங்களது மக்கள் சமயத்தோடு வாழ்வதற்காக நாங்கள் என்றென்றும் பாடுபடுவோம்
என்று கூறிக் கொள்கிறேன்.''தமிழ் தேசிய வைச மக்கள்' கட்சியின்
சுயேட்சைக்குழு 01 இற்கு சின்னமாக கோடாரி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சின்னத்தின் அர்த்தத்தை நாம் அனைவரும் புறிந்து கொள்ள வேண்டும்.
அது
காலத்தின் கட்டாயம். பரம்பொருள் சிவபெருமானின் கையில் இருக்கின்ற ஆயுதம்
தான் இந்த கோடாரி சின்னம். பரசுராமன் என்று சொல்லப்படுகின்ற அந்த
மாவீரனுக்கு அதர்மத்தை அழிப்பதற்காக சிவபெருமான் வழங்கப்பட்ட ஆயுதம் அந்த
கோடாரி.
அந்த வகையில் இறைவனால், சிவபெருமானால் எங்களுக்கும் இந்த கோடாரிச்சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே நாங்கள் சிவன் வழியிச் சென்று இந்த சின்னத்தை பயன்படுத்தி அனைத்து மக்களுக்கும் நாங்கள் சேவை செய்ய தயாராக இருக்கின்றோம்.
இந்த
கால கட்டத்தில் எல்லோறுக்கும் தெரியும் கொரோனா என்ற கொடிய நோயின் அச்சம்
காரணமாக எவரும் வெளியே வராமல் பயந்து கொண்டு வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்.அந்த நிலையில் இவ்வாறான நிலையில் நாங்கள் தேர்தலை
சந்தித்துள்ளோம்.
தேர்தல் விதி முறைகளை எங்களுக்கு அரசாங்கம் வழங்கி உள்ளது.
சட்டம்
உங்களுக்கு மட்டுமல்ல நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் சரி
அனைத்து மக்களுக்கும் இந்த சட்டம் பொதுவானதாகவே அமையும்.
அந்த
சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் தேர்தல் பிரச்சார பணிகளை
செய்ய நாங்கள் எங்களது கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த சமூக இடைவெளியை
கடை பிடித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள.
-தமிழ்
தேசிய சைவக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக
நாங்கள் வெளியிட்டு இருந்தோம். சைவத் தமிழர்களுக்காகவே இந்த கட்சி
ஆரம்பிக்கப்பட்டது. சைவத் தமிழர்களின் குரல் எங்கே நசுக்கப்படுகின்றதோ
அங்கே நாங்கள் ஓங்கி ஒலிப்போம். நாங்கள் எல்லா மதங்களையும் மதிக்கின்றோம்.
இக்கட்சியானத
எந்த ஒரு மதத்தினருக்கும் எதிராகவும் மத வாதத்தை தூண்டக்கூடிய கட்சியாக
செயற்பட்டதும் இல்லை. செயற்பட போவதும் இல்லை.மேலும் அரசியல் கைதிகளின்
விடுதலை, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரங்கள்,அடி மட்ட நிலையில் உள்ள
மக்களின் வாழ்வாதாரம்,கல்வி வளர்ச்சிக்காக நாங்கள் குரல் கொடுக்க
இருக்கின்றேம்.எந்தவித உள்நோக்கம் மற்றும் அரசியல் நோக்கம் இன்றி தேர்தல்
விஞ்ஞாபனத்தை நாங்கள் குழுவாக இருந்து தயாரித்துள்ளோம்.
நாங்கள்
வெற்றி பெற்றால் தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி ஒவ்வொரு விடையங்களையும் நடை
முறைப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவிகளை மேற்கொள்வோம் என்பதனை
கூறிக்கொள்ளுகின்றேன்.
இதுவரை
இடம் பெற்ற தேர்தல்களில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்போடு ஒன்றிணைந்து
வீட்டுச்சின்னத்திற்கு நாங்கள் வாக்களித்து இருந்தோம்.
அந்த
வகையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு சைவ பிரதி நிதியை பாராளுமன்றம்
அனுப்ப வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உயர் மட்டங்களுடன்
கடந்த 6 தடவைகள் நாங்கள் பேச்சு நடத்தினோம்.
ஆனால்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற தேர்தலில் எங்களை ஒதுக்கி
விட்டனர்.இந்த நிலையில் சைவ மக்கள்,சைவ ஆலய பிரதி நிதிகளை ஒன்று கூட்டி
கண்டன பேரணியையும் நடத்தி இருந்தோம்.
இதன்
போது எடுக்கப்பட்ட முடிவானது 'சைவத் தமிழர்களுக்கு' என மன்னாரில் இருந்து
குரல் ஒன்று ஓங்கி ஒலிக்க வேண்டும். வவுனியா,முல்லைத்தீவு ஆகிய
மாவட்டங்களில் இருந்தும் ஆதரவாக குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.அதற்கு
இணைந்து செயற்பட வேண்டும் என்று முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு
அமைவாக 'தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி' இந்த முறை வன்னி தேர்தல்
தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு 01 இல் இந்த முறை
போட்டியிடுகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
'சைவத் தமிழர்களுக்கு' என மன்னாரில் இருந்து குரல் ஒன்று ஓங்கி ஒலிக்க வேண்டும்-மனோ ஐங்கரசர்மா
Reviewed by Author
on
June 18, 2020
Rating:

No comments:
Post a Comment