பேசாலை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு...........
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட தென் கடற்கரைப்
பகுpயில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும்
விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை
மீட்டுள்ளனர்.
பேசாலை பொலிஸ்
பிரிவுக்குற்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் பொலிஸ்
பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து மன்னார் நீதவான் நீதி மன்றத்தின்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த
நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தின்
உத்தரவினைப் பெற்ற பேசாலைப் பொலிஸார் படைத்தரப்பினர் மற்றும் விசேட
அதிரடிப் படைப்பிரிவு நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொண்ட அகழ்வுப் பணியில்
மீட்கப் பட்ட சந்தேகப் பொதி பரிசோதனைக்கு உற்;படுத்தப்பட்ட போது குறித்த
பொதியில் காணப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய
உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு பேசாலைப் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் 2007ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டது என பேசாலை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது...
பேசாலை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு...........
Reviewed by Author
on
June 12, 2020
Rating:
Reviewed by Author
on
June 12, 2020
Rating:






No comments:
Post a Comment