மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்....
மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57
பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய
அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார்.
கடந்த
மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக நாட்டிற்குள் இந்தியாவில் இருந்து வருகை
தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு நேரடியாக
உதவி செய்த ஐந்து நபர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கைது
செய்யப்பட்டு மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவர்களுடன்
தொடர்புடைய பேசாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவைச் சேர்ந்த 12
குடும்பத்தைச் சேர்ந்த 52 நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுய
தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த விடையம் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை.
இது பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக நாங்கள் மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கை.
குறித்த நடவடிக்கை ஊடக இவர்கள் தொடர்ச்சியாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு அவதானிக்கப்படுவார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளின் போது பொது மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
இவ்வாறான
சட்ட விரோத ரீதியாக எமது நாட்டுக்குள் உற் பிரவேசிக்கும் மக்களை குறிப்பாக
இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருந்து
எங்களுடைய சுகாதார துறைக்கு உடனடியாக அறியத் தரும் பட்சத்தில் அது தொடர்பாக
நடவடிக்கை எடுப்பதன் மூலம் எங்கள் நாட்டுக்குள் இந்த கொரோனா தொற்று
ஏற்படுவதை தடுக்கலாம் என்பதை நாங்கள் மக்களுக்கு
தெரிவித்துக்கொள்ளுகின்றோம் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்....
Reviewed by Author
on
June 07, 2020
Rating:
Reviewed by Author
on
June 07, 2020
Rating:


No comments:
Post a Comment