தொழிலை இழந்த அனைவரினதும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.......
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த 15,000 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மூடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய தற்போது தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
எனினும், சுமார் மூன்று மாதங்கள் மூடப்பட்டிருந்த நிறுவனங்களில் மீள செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது பெருந்திரளான ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.ஜே. விமலவீர குறிப்பிட்டார்.
அவர்களில் சுமார் 15,000 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் கூறினார்.
எவ்வாறாயினும், அனைவரினதும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அதிகபட்ச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, தொழில் வழங்குனர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய தரப்புகள் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனவும் தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.ஜே. விமலவீர சுட்டிக்காட்டினார்.
Reviewed by Author
on
June 13, 2020
Rating:


No comments:
Post a Comment