முகக் கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் நாளை முதல் விசேட நடவடிக்கைகள் ........!!!
முகக் கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் ஆராய நாளை (28) முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது பெரும்பாலானவர்கள் செயற்படுவதாக அவர் கூறினார்.
மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 6725 பேர் முகக் கவசம் அணியாது பொது இடங்களில் பயணித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுட்டிக்காட்டினார்.
இவர்கள் அனைவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனால் நாளை முதல் முகக் கவசங்களை அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
Reviewed by Author
on
June 27, 2020
Rating:


No comments:
Post a Comment