மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழா கொண்டாட மன்னார் மறைமாவட்ட ஆயர் அனுமதி.........
மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழாவை
கொண்டாடுவதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ
ஆண்டகை அனுமதி வழங்கியுள்ளதாக மன்னார் மறைசாட்சிகள் சமூகநல அமைப்பின்
ஆய்வாளர் எஸ்.அந்தோனிப்பிச்சை தெரிவித்தள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார்
மறைசாட்சிகள் விழா ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் மூன்றாவது வாரத்தின்
வெள்ளிக்கிழமை கொடி யேற்றப்பட்டு சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலியுடன்
நிறைவு பெறும்.
வுழமை போல் இவ்வாண்டும்
எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதி (17-07-2020) அன்று தோட்ட வெளி
வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு 18ம் திகதி காலை
திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுக்க மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அனுமதி வழங்கியுள்ளார்.
தற்போது
நாட்டிலுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆலயங்களில் பின் பற்ற வேண்டிய
அரச விதிகளுக்கு அமைய விழா நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில்
மக்கள் கைகளை கழுவி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப்பேணி சுமார் 50
பேர் மட்டும் இவ் திருவிழாத் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதி
வழங்கியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்....
மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழா கொண்டாட மன்னார் மறைமாவட்ட ஆயர் அனுமதி.........
Reviewed by Author
on
June 24, 2020
Rating:
Reviewed by Author
on
June 24, 2020
Rating:



No comments:
Post a Comment