அமரர் டக்லஸ் யோகநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வறிய மக்களுக்கான நிவாரண உதவி வழங்கல்..
அமரர் டக்லஸ் யோகநாதன் அவர்களின் 10 ஆவது வருட நினைவினை முன்னிட்டு அவர்தம் பிள்ளைகள் “ லஸ்மி கரங்கள்” ஊடாக இன்று (18-06-2020) 102 குடும்பங்களுக்கு 1800/- பெறுமதியான உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது இதில் பள்ளிமுனை கிராமத்தில் 42 குடும்பமும் சின்னக்கடை, பனங்கட்டுக்கொட்டு ஆகிய கிராமங்களை இணைத்து 60 குடும்பங்களுக்கும் பள்ளிமுனை சென்லூக்காஸ் ஆலயத்திலும் ,புனித செபஸ்ரியார் பேராலயத்திலும் வைத்து வழங்கப்பட்டது இதில் பள்ளிமுனை பங்குத்தந்தை வண.மரியதாசன் (சீமான்) அடிகளார் அவர்களும், செபஸ்ரியார் ஆலய பங்குத்தந்தை வண.ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்களும் , மன்னார் றோட்டறிக் கழக தலைவர் கெளரவ திரு. ப. ஜெரோம் அவர்களும் , இரு பங்கின் செயலாளர்கள் பங்கின் ஊழியர்களும் “ லக்ஸ்மி கரங்கள்” சார்பில் அதன் இணைப்பாளர் திரு. குலநாயகம், திரு. சி.சிறி ( GS) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
அமரர் டக்லஸ் யோகநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வறிய மக்களுக்கான நிவாரண உதவி வழங்கல்..
Reviewed by Author
on
June 18, 2020
Rating:

No comments:
Post a Comment