குழந்தையை வயிற்றில் சுமக்கும் கணவன் பேரின்பத்தில் மனைவி.....
கணவன் கருவில் குழந்தையை சுமக்க, கணவனின் மேடிட்ட வயிற்றை மனைவி முத்தமிடும் அபூர்வ புகைப்படம் ஒன்று வெளிகியுள்ளது.
அது ஒரு வித்தியாசமான ஜோடி! மனைவியான Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். கணவர் Esteban Landrau பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்.
இருந்தாலும், இன்னமும் இருவரும் அறுவை சிகிச்சை செய்து தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை அகற்றிக்கொள்ளவில்லையாம்.
ஆக, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே கருவுற்றிருக்கிறார்கள்.
எட்டு மாத கர்ப்பமாக இருக்கும் Estebanக்கு ஒரு நாள் திடீரென இடுப்பு வலி வர, உடனே தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக எண்ணி, உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்.
ஆனால், எட்டு மாத கர்ப்பகாலத்தில் இதெல்லாம் சகஜம், இது போலி இடுப்பு வலி என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம் மருத்துவர்கள்.
தங்களுக்கு குழந்தை பிறந்தால் Ariel என்று பெயர் வைக்கப்போவதாக சொல்லி உணர்ச்சி வசப்படுகிறார்கள் இந்த வித்தியாசமான தம்பதியர்.
Reviewed by Author
on
June 01, 2020
Rating:


No comments:
Post a Comment