மந்திரவாதி பேச்சை கேட்டு பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை......
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். கட்டட பணி செய்து வரும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தத்தில் பன்னீர்செல்வம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நண்பர் மூலம் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார் பன்னீர்செல்வம். மகளை நரபலி கொடுத்தால் ஆண் வாரிசு விரைவில் கிடைக்கும் என அந்த மந்திரவாதி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பிய பன்னீர்செல்வம் குளத்திற்கு தண்ணீர் எடுக்கச் சென்ற தனது மகளை கடந்த 18ஆம் தேதி கூட்டி சென்று காட்டுக்குள் கொலை செய்துள்ளார்
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது தந்தை பன்னீர்செல்வம் நடந்ததை ஒப்புக் கொண்டார் இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார் மாயமான மந்திரவாதியை தேடி வருகின்றனர் புதையல் கிடைக்கும் ஆண் வாரிசு கிடைக்கும் என்று மந்திரவாதியின் பேச்சை நம்பி பெற்ற மகளை தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மந்திரவாதி பேச்சை கேட்டு பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை......
Reviewed by Author
on
June 03, 2020
Rating:

No comments:
Post a Comment