கனவு நிறைவேறாமல் உயிரிழந்த சிறுமி, பிரான்சில் சோகம்......
பிரான்சைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான Luce Douady (16), ஆல்ப்ஸ் மலையில் மலையேறும்போது 500 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ் மலையேற்றக் குழுவில் இருக்கும் Luce, ஜூனியர் பிரிவில் உலக சாம்பியன், மட்டுமல்ல, சீனியர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். தனது நண்பர்களுடன் மலையேறிக்கொண்டிருந்த Luce சறுக்கி விழுந்ததாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், பாதுகாப்புக்காக தனது இடுப்பில் கட்டப்பட்டிருந்த கயிற்றை Luce சரியாக இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், இத்தகைய விபத்துகள் இப்பகுதியில் அபூர்வம் என்பதால் காவல்துறையினர் விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளார்கள்.
இந்த முறை டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் முதல்
முறையாக மலையேற்றமும் சேர்க்கப்பட இருந்த நிலையில், அதில் வெற்றிபெற
வேண்டும் என்ற கனவில் இருந்தார் Luce.
ஆனால், அந்த கனவு நிறைவேறாமலே அவர் உயிரிழந்துள்ளார்...
Reviewed by Author
on
June 18, 2020
Rating:








No comments:
Post a Comment