யாழ் நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி.......!!!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.
அத்துடன், அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடைசெய்யப்படுகிறது” என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது...
Reviewed by Author
on
July 21, 2020
Rating:


No comments:
Post a Comment