மலையக தேர்தல் பிரசாரத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி நுவரெலியாவுக்குச் செல்லவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்... நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளையும் மையப்படுத்தியே ஜனாதிபதியின் இந்த பிரசாரம் அமையவுள்ளது.
நுவரெலியா, பூண்டுலோயா, ஹட்டன், வலப்பனை, கொட்டகலை மற்றும் ஹங்குராங்கெத்த, கினிகத்தேனை ஆகிய பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது..
.
Reviewed by Author
on
July 02, 2020
Rating:


No comments:
Post a Comment