தலை மன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் பொலிஸ்
பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை
உருக்குழைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை தலைமன்னார்
பொலிஸார் மீட்டுள்ளனர்.
-தலைமன்னார் கடற்கரை
பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை றோர்ந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர்
கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.
கடற்படையினர்
உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார்
பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரனைகளை
முன்னெடுத்ததோடு,மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு
சென்றனர்.
-மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலை மன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
July 27, 2020
Rating:

No comments:
Post a Comment