ஜனாதிபதி பேசுவதை பிரதமர் கேட்பதில்லை, பிரதமர் கதைப்பதை ஜனாதிபதி கேட்பதில்லை......
நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பதற்காக நாம் எவ்வாறு ஒற்றுமையாக வாக்களித்தோமோ அதேபோன்று அனைவரும் ஒன்றுமையாக வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் அரசாங்கம் இரண்டு துருவங்களாக காணப்பட்டன. ஜனாதிபதி பேசுவதை பிரதமர் கேட்பதில்லை, பிரதமர் கதைப்பதை ஜனாதிபதி கேட்பதில்லை.
சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து பொருளாதார முன்னேற்றத்தினை ஏற்படுத்துவோம். மேலும் விவசாயிகளுக்கு மானிய வசதிகளை ஏற்படுத்துவோம்.நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பதற்காக நாம் எவ்வாறு ஒற்றுமையாக வாக்களித்தோமோ அதேபோன்று அனைவரும் ஒற்றிணைந்து பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து புதிய அத்தியாயத்தினை ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
Reviewed by Author
on
July 24, 2020
Rating:


No comments:
Post a Comment