மாணவிகளைச் சீண்டிய இளைஞர்களை தட்டிக் கேக்க சென்ற இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்................
தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகளை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை – கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் பிரத்தியேக வகுப்பிற்கு சம்மாந்துறை பகுதியில் இருந்து மாணவிகள் வருகை தருகின்ற நிலையில் இவ்வாறு வரும் பெண்களை தொடர்ச்சியாக வீதியில் நின்று சில இளைஞர்கள் சீண்டி வருவதாக தமது நண்பர்கள் உறவினர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று(செவ்வாய்க்கிழமை) வழமை போன்று குறித்த பெண்கள் தனியார் வகுப்பிற்கு செல்கின்ற போது வீதியில் நின்ற இளைஞர்கள் சீண்டியுள்ளனர்.
இதனால் குறித்த பெண்களுடன் சம்மாந்துறை பகுதியில் இருந்து வந்தவர்களுக்கும் சாய்ந்தமருது பகுதியில் பெண்களை சீண்டியவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் பெண்களுடன் வருகை தந்த
சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 17, 18 வயதினை உடைய இருவரே காயமடைந்து
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது...
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Reviewed by Author
on
July 08, 2020
Rating:


No comments:
Post a Comment