ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த பூசா சிறைச்சாலை கைதிகள்.........
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பூசா சிறைச்சாலையில் உள்ள கொஸ்கொட தாரகவை விசாரணைக்கு உட்படுத்திய போது வெளியான தகவல்கள் குறித்து பூசா சிறைச்சாலையில் உள்ள மிகவும் ஆபத்தான கைதிகள் சிலர் ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்த ஏனையவர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்ததன் பின்னர் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
Reviewed by Author
on
July 22, 2020
Rating:


No comments:
Post a Comment