சாத்தான்குளம் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் - சூர்யா
சாத்தான்குளம் சம்பவத்தில் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.
சாத்தான் குளம் சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சூர்யா இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், “சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவுக்கு நிகழ்ந்த பொலிஸாரின் அத்துமீறல் பொலிஸாரின் மாண்பைக் குறைக்கும்.
இந்த கொடூர மரணத்தில் கடமை தவறிய அனைவரும் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஒட்டு மொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக பொலிஸார் உழைக்கின்றனர். முன்வரிசையில் நிற்கிற பொலிஸாருக்கு தலைவணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்....

No comments:
Post a Comment