போதைப்பொருள் விநியோகத்திற்காகபயன்படுத்தப்பட்ட பருந்து கண்டுபிடிப்பு.....
அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகளால் குறித்த பறவை நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகக்குழு தலைவர் ஒருவராக கருதப்படும் " அங்கொட லொக்காவால் போதைப்பொருள் விநியோகத்திற்காகபயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த பருந்து அதுருகிரிய பொலிஸாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மீகொடை, நாவலமுல்ல, மயான வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு கண்டிபிடிக்கப்பட்ட பருந்து சுமார் 15 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை தூக்கிச் செல்லக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இன பருந்துகளை கட்டளைகளைப் பின்பற்றக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க முடியும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் விநியோகத்திற்காகபயன்படுத்தப்பட்ட பருந்து கண்டுபிடிப்பு.....
Reviewed by Author
on
July 31, 2020
Rating:
Reviewed by Author
on
July 31, 2020
Rating:


No comments:
Post a Comment