நிறவெறிக்கு எதிராக சியாட்டலில் மிகப்பெரிய போராட்டம்....
சியாட்டலில் நிறவெறிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தைச் சுற்றி இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.
கிங் கவுண்டி சிறார் தடுப்புக்காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்காக சில எதிர்ப்பாளர்கள் கட்டுமான இடத்திற்கு தீ வைத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 21 அதிகாரிகள் காயமடைந்தனர் என்றும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்பிரகாரம் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர் என சியாட்டல் பொலிஸார் டுவிட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

No comments:
Post a Comment