இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்........
அரச மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) வரையறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணிவரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.
இதேநேரம், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை தயார்படுத்துவதற்காக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment