தமிழகத்தில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்து 785 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்கியுள்ளது.
இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 749 ஆகப் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 88 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் மூவாயிரத்து 320 ஆக உயர்ந்துள்ளன.
சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 92ஆயிரத்து 206 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ஆறாயிரத்து 504 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 297 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகபட்சமாக 63 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
Reviewed by Author
on
July 25, 2020
Rating:


No comments:
Post a Comment