தற்போதைய அரசாங்கம் ஒரு குழப்பகரமான அரசாங்கமாக மாறியுள்ளது என விசனம் வெளியிட்ட மனோ கணேசன்......
இந்த அரசாங்கம் தன்னை தானே அவமானப்படுத்திக்கொள்ளும் அரசாங்கமாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஒரு குழப்பகரமான அரசாங்கமாக மாறியுள்ளதாகவும் அவர் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார்.. அத்துடன், நாட்டிற்கு பெருமையைக் கொண்டுவந்த கிரிக்கட் வீரர்களை அவமானப்படுத்தி தற்போதைய அரசாங்கம் குழப்பத்தினை ஏற்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் மஹேல ஜெயவர்த்தனவிற்கும், குமார் சங்கக்காரவிற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் நாட்டின் கீர்த்தியினை அபகீர்த்தியாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட போது சங்காவும், மஹேலவுமே நாட்டிற்கு கீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மறந்துவிடக் கூடாது எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
Reviewed by Author
on
July 03, 2020
Rating:


No comments:
Post a Comment