பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு நிவாரண திட்டமொன்றை வழங்க தீர்மானித்துள்ளேன்....!!!
ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை தன்னால் பாதுகாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன்.
அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்.
கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையில் திட்டத்தை உருவாக்குவேன்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்...
Reviewed by Author
on
July 02, 2020
Rating:


No comments:
Post a Comment