அப்பாவிகள் மீதான கோழைத்தனமான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது முன்னாள் எம்.பி காதர் மஸ்தான்
தமக்கு ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலைமையினை ஜீரணிக்க முடியாத
காடையர்களின் இழிவானதும் கோழைத்தனமுமான தாக்குதல்களால் தமது எழுச்சியை
அடக்கி விட முடியாது என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்
பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
வவுனியா
சாளம்பைக்குளத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு (27) ஒரு அரசியல் வாதியின்
எடுபிடிகளான காடையர்கள் குழுவொன்று எனது ஆதரவாளர்களான அப்பாவி மக்கள் மீது
மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இதனால் பல வாகனங்கள் சேதமுற்றதுடன் பல அப்பாவிகள் காயமடைந்துள்ளதுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாட்டினால் அவர்கள் எதனைச் சாதிக்க நினைக்கின்றனர்.
தாம் சுகபோகமாக வாழ்வதற்காக அப்பாவிகளை தாக்குவது மனித நேயமற்றதும் கொடூரமானதாகவுமுள்ளது.
கடந்த காலங்களிலும் இவ்வாறே மாற்றுக்கட்சியினரை பழிவாங்கும் பாசிசம் வன்னியில் தாண்டவமாடியது.
அது இன்னும் தொடர்வது தான் வேதனையாக உள்ளது.
எம்மைப் பொறுத்தவரை இந்த சீண்டல்களுக்கும் ரௌடித்தனங்களுக்கும் நாம் பயந்தது கிடையாது.
ஜனநாயகத்தின்
கழுத்தை நெரிக்க முனைபவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களது
இந்த காடைத்தனங்களால் எமது பயணம் இன்னும் வீரியத்துடன் வேகமெடுக்கும்
என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறித்த
தாக்குதல் சம்பவத்தை நான் வண்மையாக கண்டிப்பதோடு வன்முறையில் ஈடுபடுவர்கள்
அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அப்பாவிகள் மீதான கோழைத்தனமான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது முன்னாள் எம்.பி காதர் மஸ்தான்
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment