கோகண்ண விகாரையே கோணேஸ்வரம் ஆலயமாகும்..........
“திருகோணமலையில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவதலமான கோணேஸ்வரம் ஆலயம்
என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது. இதற்காக நாம் கோயிலை இடித்து
விகாரை கட்ட மாட்டோம். ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய
தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதனைச் செய்தாலே
போதும்” என்கிறார்..
இவ்வாறு ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் ‘சுடர் ஒளி’க்குத் தெரிவித்துள்ளார்...
இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது கட்டுக்கதை என்று சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட இதே தேரர், தற்போது இந்துக்களின் புனித தலமான கோணேஸ்வரம் கோகண்ண விகாரை என்று புதிய குண்டைத்தூக்கிப் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
இது பற்றி மேலும் கூறிய அவர்,
“கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்த 2000 இடங்கள் உள்ளன. இவை தேசிய மரபுரிமைகளாகும்...
இதை கூடிய விரைவில் செய்து முடிக்க வேண்டும்... குறிப்பாக பொலனறுவையில் உள்ள சிவன் கோயில் எம்முடையது அல்லவென்றாலும் அதை நாம் பாதுகாக்கின்றோம்.” – என்றார்...
Reviewed by Author
on
July 08, 2020
Rating:


No comments:
Post a Comment