இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா !!!
இந்திய – சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே முறுகல் நிலவி வரும் நிலையில் இப்பிரச்சனையில் இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்;சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘தென் சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எந்த நாடும் அத்துமீறலில் ஈடுபடுவதை அமெரிக்கா அனுமதிக்காது. அதன் காரணமாகவே விமானம் தாங்கிக் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளோம்.
லடாக் விவகாரத்திலும் இந்திய இராணுவத்துக்குத் துணையாக நிற்போம். உலக நாடுகளிலே வலிமையான இராணுவப் படையை அமெரிக்கா தான் கொண்டுள்ளது. அதை மற்ற நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

No comments:
Post a Comment