உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.........
அவுஸ்திரேலியாவின் அனுசரணையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.
COVID – 19 தொற்றின் தாக்கத்தினை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்கின்ற உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவிருந்தது.
தொடர் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்தது. எனினும், தற்போதைய COVID – 19 தொற்றின் அபாயத்தினை கருத்திற் கொண்டு தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
தொடரை சிறப்பான முறையில் நடத்துவதற்காகவும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிட்ததக்கது..
Reviewed by Author
on
July 21, 2020
Rating:


No comments:
Post a Comment