யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு
யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்
கொரோனா வைரஸ் தொற்று காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தன. கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமையான புகையிரத சேவைகள் இடம் பெற்று வருகின்றன.
கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி புகையிரத சேவை எதிர்வரும் 29 ,30 ,31 மற்றும் 1 ஆம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொரோனா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த சேவையானது எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ் புகையிரத நிலையத்தில் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண பிரதான புகையிரத அதிபர் மேலும் தெரிவித்தார்.
யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு
Reviewed by Author
on
August 25, 2020
Rating:

No comments:
Post a Comment