கிளிநொச்சி முழங்காவில் கொரோனா கண்காணிப்பு நிலையத்திலிருந்து 60பேர் வெ ளியேறினர்!
கிளிநொச்சி முழங்காவில் 651 படையணியின் பயிற்சி முகாமில் அமைந்துள்ள கொரோனா கண்காணிப்பு நிலையத்திலிருந்து 60பேர் வெளியேறியுள்ளனர்.
தொழில் வாய்ப்புக்கருதி டுபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் கடந்த அன்று நாடு திரும்பிய 60பேர் மேற்படி முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
14 நாட்கள் நிறைவு செய்துள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முடிந்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட 60பேர் இன்று அவர்களின் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
இவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் தளபதி Major general KNS kotuwegoda மேஜர்; ஜென்ரல் கே.என்.எஸ். கொதுவெகொட கலந்து கொண்டு வழங்கி வைத்துள்ளார்.
Reviewed by NEWMANNAR
on
August 27, 2020
Rating:


No comments:
Post a Comment