இளம் பெண் கொலை இரு பெண்களுக்கு விளக்க மறியல் பிரதான சந்தேக நபருக்கு வலைவீச்சு`
இம்மாதம் மன்னார் செளத்பார் உப்பளபகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பாக பல்வேறு அதிர்சியான செய்திகள் வெளிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த யுவதியுடன் மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவ் பெண்ணின் சகோதரிகள் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் 7 மணியளவில் மன்னார் பொலிஸாரால் நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ முன்னிலையில் முற்படுத்தியிருந்தனர்
கைது செய்யப்பட்ட இரு பெண்கள் சார்பாக முன்னிலையாகிருந்த சட்டதரணி குறித்த கொலைக்கு அவ் இரு பெண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் வெளிநாட்டுக்கு அனுப்பிவதற்கு என குறித்த பெண்ணின் தாய்மாமனிடம் பெண்ணை ஒப்படைத்து தாங்கள் சென்றதாகவும் தங்களுக்கும் இக் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார்
ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்சார்பாக சட்டத்தரணி சர்மிலன் டயஸ் முன்னிலையாகியிருந்ததுடன் இவ் கொலையானது திட்டமிடப்பட்டு இடம் பெற்றுள்ளதாகவும் இறந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இக்கொலை இடம் பெற்றதாகவும் அவ் இரு பெண்களும் பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புகொண்டுள்ளதாகவும் எனவே இக் கொலையின் பிரதான சந்தேக நபரான அவ் பெண்ணின் தாய்மாமனை கைது செய்வதற்கான அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்குவதுடன் குறித்த இரு பெண்களையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்
இரு தரப்பு வாத பிரதிவாதங்களின் பின்னர் குறித்த பிரதான சந்தேக நபரான செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் தாய்மாமன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இரு பெண்களையும் வருகின்ற மாதம் நான்காம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ உத்தரவிட்டுள்ளார்
அதே நேரத்தில் குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அப்பெண்ணின் தாய்மாமனை பொலிஸார் தோடிவருகின்றமை குறிப்பிடதக்கது
இளம் பெண் கொலை இரு பெண்களுக்கு விளக்க மறியல் பிரதான சந்தேக நபருக்கு வலைவீச்சு`
Reviewed by Author
on
August 23, 2020
Rating:
Reviewed by Author
on
August 23, 2020
Rating:




No comments:
Post a Comment