சற்று முன் வவுனியாவில் முதியவரை மோதித்தள்ளிய பேரூந்து : முதியவர் பலி
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (11.08.2010) மதியம் 12.00 மணியளவில் முதியவர் ஒருவர் மீது இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து ஏறியதில் முதியவர் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து குருநாகல் மாவட்டம் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து பேரூந்துக்கு முன்பாக நின்ற முதியவரை கவணிக்காமல் புறப்பட்டுள்ளது.
இதன் போது பேரூந்து முதியவரை மோதுத்தள்ளி அவர் மீது ஏறியுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் சத்தமிட்டதினையடுத்து பேரூந்தின் சாரதி பேரூந்தினை நிறுத்தியுள்ளார்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.
Reviewed by Admin
on
August 11, 2020
Rating:










No comments:
Post a Comment