மன்னாரில் ரஸ்ய பிரஜை கைது தனிமைப்படுத்தி வைப்பு
தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யபிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
தலைமன்னார் கடற்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசார் மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கயஸ் பெல்டானோ முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய நிலையில் சட்டத்தரணி டிணேஸன் ரஸ்ய பிரஜை சார்பாக முன்னிலையாகியிருந்தார் குறித்த நபரை சிறையில் அடைக்க உத்தரவு இட்டிருந்த நிலையில் குறித்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் தலைமன்னார் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்
குறித்த நபருக்கான P.CR பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் குறித்த நபர் சிறையில் அடைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் நகர் நிருபர்
Reviewed by Author
on
August 11, 2020
Rating:



No comments:
Post a Comment